வியாழன், 9 டிசம்பர், 2010

என்னை நினைத்தே நானும் அழுதேன்...

எல்லாமே அததுட இஷ்டத்துக்கு நடந்துட்டே போகுது.. யாரப் பார்த்தாலும் "நான்தான் பெரிசு"ங்குற பெரிய தனம்.கொஞ்சம் கண் மூடினா போதும் தலையில கல்லை தூக்கிப் போட்டுட்டு அவங்கட பாட்டுல போய்ட்டே இருப்பாங்க. சாவு கூட "வந்தா வா போனாப்போ"ங்குற வேண்டா வெறுப்புக் கொள்கை..."வாரது வரட்டும் ரெண்டுல ஒன்று பார்த்துட்டுத்தான் மற்ற வேலை"ங்குற தைரியம்,தன்னம்பிக்கை எல்லாம் நிறைந்த மனிதர்களே இன்றைய பூமியில் நிரைந்து வாழ்கிறார்கள்..நல்ல விடயத்துக்காக மக்கள் இவ்வாறான கொள்கையில் வாழ்வது சந்தோசம். ஆனால் எங்க,எல்லாமே சுய நலம் தானே? நான் எப்பவுமே வாழ்க்கையை இலகுவாய் எடுத்துக் கொள்பவள் இருந்தும் இன்று எனது உறவினரால் ரனப்பட்ட இதயம் இயங்க மறுக்கிறது..தனது மகுடிக்கு என்னை இயக்க நினைக்கும் அந்த உறவை இந்தக்கணம் வெறுக்கிறேன்.(இந்த வெறுப்பு நாளை தவறாக மாறலாம்) என்ன செய்வது எல்லாவற்றையும் இயக்கபவன் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான்..தலைவிதி எனும் சொல்தானே பலரின் சோகத்துக்கு மருந்தாகுது..எனக்கும் தான்.மனம் பலத்த வேதனையில் உள்ளதால் சந்தோசமான அடுத்த பதிவுடன் மீண்டும் சந்திக்கிறேன்

8 கருத்துகள்:

  1. எல்லாமே சுய நலம் தானே? நான் எப்பவுமே ??////வாழ்க்கையை இலகுவாய் எடுத்துக் கொள்பவள் இருந்தும் இன்று எனது உறவினரால் ரனப்பட்ட இதயம்......//

    வேதனை!

    தொடர்ந்து எழுதுங்க...

    பதிலளிநீக்கு
  2. word verification னை எடுத்து விடுங்க பின்னூட்டம் இடுகின்றவர்களுக்கு இலகுவாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  3. நன்றி மகாதேவன்.உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன்

    பதிலளிநீக்கு
  4. உன்னை நினைத்தேன் நானும் அழுதேன்...சப்னா.,அவரவர் பற்றி பேசிப் பேசிப் பெருமை தேடும் இந்த உலகில் தன்னம்பிக்கைதான் வாழ்வின் வெற்றிக்கு பலம் சேர்க்கிறது.உதிர்வோம் என்று தெரிந்தும் பூக்கள் மலராமலிருக்கிறதா?விடியும் என்றுதானே உறங்குகிறோம்.என்ன செய்யலாம் அவ்வப்போது வாழ்க்கையில் நடக்கும் சில கசப்பானவைகளை எண்ணி மனம் நோவதை விட,அடுத்தடுத்த நாட்களை எப்படி சந்தோசப்படுத்தலாம் என்று திட்டமிடுங்கள்.கவலைகளை கொஞ்சம் இறக்கி வையுங்கள் ........பொறுமை நிச்சயம் வெற்றியைத்தரும்........................

    பதிலளிநீக்கு
  5. நன்றி அஸ்கர்.ம்ம்ம்...சரிதான்.

    பதிலளிநீக்கு
  6. தைரியம்,தன்னம்பிக்கை எல்லாம் நிறைந்த மனிதர்களே இன்றைய பூமியில் நிரைந்து வாழ்கிறார்கள்.அருமை.

    பதிலளிநீக்கு
  7. ம்... எல்லா இடமும் இப்படி தான். ஆனால் நாங்கள் வலிகளினால்படும் அனுபவம் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு நம்பிக்கையோடு செல்ல பெரிதும் உதவும்.

    பதிலளிநீக்கு