திங்கள், 13 டிசம்பர், 2010

ஒற்றைத்தலை வலி...

இந்த ஒற்றைத்தலை வலி கொஞ்ச நாளாவே என்னை பாடாய்ப்படுத்துது... மனதில் ஏதும் கவலை,யோசனை கூடிவிட்டால் போதும் வந்து விடும்...இந்த 2,3 நாட்களாக ரொம்பவும் கஷ்டப்பட்டேன்...இதற்கு முன்னரும் கடந்த வருட இறுதிப்பகுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். எனது இந்த பதிவை வாசிக்கும் நன்பர்கள் யாராவது இந்த ஒற்றைத்தலைவலி பற்றித்தெரிந்தருந்தால் கொஞ்சம் விளக்கம் தாருங்கள்..இது ஏன் வருகிறது,பின் விளைவுகள் என்ன என்பது பற்றி. மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிரேன்.

5 கருத்துகள்:

  1. தலை வலியும்,காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் எனபார்கள்..சப்னா உங்கள் வலிகள் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.ஒற்றை தலை வலி சம்பந்மாக இப்போது என்னால் கூற முடியவில்லை.பின்னர் இது சம்பந்தமாக தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்கிறேன்.இருந்த போதிலும் நல்ல வைத்தியரை அணுகி இது தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்..கடந்த காலத்தில் நடந்தவைகளை எண்ணி அடிக்கடி மூலையில் போட்டு குழம்பாதீர்கள்.கவலை தரும் சம்பவங்களை அடிக்கடி உங்கள் மனக் கண் முன் கொண்டு வராதீர்கள்.அப்படித்தான் உங்களை அறியாமல் சில எண்ணங்கள் வந்தால்.உங்கள் எண்ணத்தின் திசையை மாற்றி,குடும்பத்துடன் ஏதாவது மனம்விட்டு பேசி மகிழ்ச்சியாகயிருங்கள்.கவலைகளை அடக்க அடக்க உடலும் உருக்குலைந்து போகும்,ஆக!கவலைகளை மறந்து மகிழ்ச்சியாகயிருக்க எனது பிரார்த்தனைகள்.......வாழ்க வளமுடன்........

    பதிலளிநீக்கு
  2. தங்களின் ஆலோசனைக்கு நன்றி அஸ்கர்.

    பதிலளிநீக்கு
  3. இந்தத் தொடுப்பில் பாருங்கள் தங்களுக்கு உதவியாக இருக்கும்...

    http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/0905/13/1090513103_1.htm

    http://maruththuvam.blogspot.com/2006/02/migraine.html

    பதிலளிநீக்கு
  4. followers பட்டன் சேர்த்தால் தங்களின் பதிவைப் பெற உதவியாக இருக்கும்...

    ஏதாவது உதவி தேவையானால் கேளுங்கள்...

    பதிலளிநீக்கு
  5. நன்றி சகோதரர் சுதா...நிச்சயமாக தங்களின் உதவி தேவைப்படின் நாடுகிறேன்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது நீங்கள் குறிப்பிட்டிருந்த தளம்...மீண்டும் எனது நன்றிகள்

    பதிலளிநீக்கு