சனி, 29 ஜனவரி, 2011

Haai friends!

haai friends, சுகமா? வலையைப் பின்ன நேரம் கிடைப்பதே இல்லை.கிடைக்கும் நேரத்தையெல்லாம் இந்தக் கண்கள் குத்தகைக்கு வாங்கி உறங்கி விடுகின்றன. மீண்டும் சந்திக்கிறேன் கண்களை வலை பின்ன குத்தகைக்கு எடுத்த பின்னர்.

வியாழன், 30 டிசம்பர், 2010

நண்பியின் காதல் கதை...

2010உம் கூட பெரிதாக எனக்கொரு மாற்றத்தையும் தந்துவிடவில்லை...வெரும் எழுத்தினாலான வருடத்தால் என்னதான் செய்ய முடியும்? நாமாக எதையாவது செய்தால் தானே நமக்கு நன்மை கிடைக்கும். இதில் காலத்தை மெச்சுவதும் குறை கூறுவதும் முட்டாள் தனமே...எதற்கும் ஒரு எல்லை வேண்டும் என்பதற்காகவோ என்னவோ இந்த செக்கன்,நிமிடம்,மணித்தியாலம்,நாள்,வாரம்,மாதம்,வருடக் கணக்குகளெல்லாம்... செய்துதான் பார்ப்போமே என்று நினைப்பவன் எப்படியாவது வெற்றி அடைகிறான்.இப்படித் துணிந்த மனிதனுக்கு காலம் ஒரு பொருட்டே அல்ல. சுகதேகியாக இருக்கும்போதே உழைப்பைப் பற்றி சிந்திக்க வேண்டும்,இளமையோடு இருக்கும் போதே கடமைகளை சிந்திக்க வேண்டும்,செல்வம் இருக்கும்போதே தர்மத்தை சிந்திக்க வேண்டும்...ஆக செய்ய வேண்டிய காரியங்களை செய்யவேண்டிய பருவங்களில் செப்பனே செய்து வந்தால் வெற்றி நிச்சயம்.இதில் செயற்திறனும்,புத்தி சாதுர்யமும் இருப்பின் எக்காலத்திலும் வெற்றி நிச்சயம். காதலும் கற்று மற என்றுதானே சொல்லப்படுகிறது...இது எத்தனை வீதம் உண்மையாகிறதோ? எனக்கு மிகவும் நெருக்கமான தோழியின் காதல் கதையை அவளது அனுமதியுடன் பெயர் மாற்றித் தருகிறேன். ஸபி...இவள் இயற்கையை அதிகம் ரசித்து யதார்த்தங்களை விரும்பக்கூடிய ஒரு பெண்..இவளது அழகும் கூட பலருக்கு இவளை எதிரியாக்கியது..இவளது பள்ளிக் காலத்தில் இவளுக்கு வந்த காதல் கடிதங்கள் இனம்,மதம்,மொழிப் பாகுபாடு அற்றது..இன்றும் அவள் நினைத்து சிரித்துக்கொள்ளும் விடயங்களில்,அவளைத் தேடி வந்த சில காதல் கடிதங்கள் கொடுத்தவரின் வீட்டுக்கே அவள் மூலம் சென்றதுதான்.. இப்படியிருக்க இவளைத் தேடிவந்த காதலில் ஒன்று மனதையீர்ர்க்க காதல் மலர்ந்தது.படிப்பில் கெட்டிக்காரியாக இருந்த இவளுடன் அனைத்து ஆசிரியர்களும் அன்பாக இருந்தார்கள்.வகுப்பாசிரியை மிகவும் அன்பாக இருந்தார். இதில் கொடுமை என்னவென்றால் இவள் காதலிக்கும் இளைஞன் அவளது வகுப்பாசிரியையின் தம்பி என்பது அவளுக்குத் தெரியாது. பின் விடயம் இரு தரப்பிலும் தெரிய வர அவள் வீட்டு வீரத் தளபதிகளான அண்ணன்மார் மாமன்மார் சேர்ந்து சென்று அவனை மிரட்டியதும்,இங்கு ஆசிரியை அவளுக்கு புத்திமதி கூறி கடிதம் கொடுத்ததும் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது..படிப்பு முடியும் வரை அவளைச் சுற்றிய ஒருதலைக்காதல்கள் தொடர்ந்தன. அவளுள்ளும் ஒரு சில காதல்கள் மின்னி மறைந்தன...அவளது உயர்தர இருதிப்பகுதியில் ஒரு புத்திசாலி(இவளின் தூரத்து உறவு) இவளிடம் காதலைச் சொல்லி இவள் மறுக்க பெரியவர்கள் மூலம் குடும்பத்தின் விருப்பத்தைப் பெற்றுக் கொண்டான்.பணம் படைத்தவன் அழகானவனும் கூட..இருந்தும் ஏனோ அவளைக் கவரவில்லை. வீட்டாரும் அவனும் எவ்வளவோ முயற்சித்தும் அவளது மனதை மாற்ற முடியவில்லை... இவளின் 10ம் தர ஆரம்பப் பகுதியில் இவளையும் அறியாமல் உள்ளே நுழைந்த ஒரு காதல்(ஆரம்பத்தில் இவளால் வெறுக்கப்பட்டு,பின் பல காரணங்களுக்காக விரும்பப்பட்ட ஒரு காதல்) இதன் ஆதிக்கம் உள்ளே அதிகரித்திருந்ததால் அவளால் ஏனையவற்றை ஏற்பது கஷ்டமாகத்தான் இருந்தது.. முகமறியப்படாத அந்தக் காதலன் "லோச்சி" அவள் மனதை ஆண்டான்...சாத்தியப்படாதது எனத் தெரிந்திருந்தும் அவன் மீதான காதல் தொடர்ந்தது..இதை அவனும் அறிந்திருந்தான்.ஆனாலும் அவனது மனதை அவளால் புரிய முடியவில்லை.லோச்சி பலராலும் விரும்பப் படக்கூடிய ஒரு பரபரப்பான துறையில் தொழில் புரிந்துகொண்டிருந்தான். இங்கே இவளது குடும்பத்தின் விருப்பைப் பெற்ற இளைஞன் அதி கூடிய முயற்சிக்குப் பின் அவளது புன்னகையை பதிலாகப் பெற்றான்.. அவளது படிப்பும் முடிந்தது. லோச்சி மீதான காதல் அவளுள் தொடர்ந்தது..அவள் மீதான காதல் அந்த அழகிய இளைஞனுள் அதிகரித்தது. இவளும் ஒருவாறு லோச்சியை அடி மனதினுள் புதைத்து வைத்துவிட்டு குடும்பத்தின் விருப்புக்கேற்ப அந்த இளைஞனை விரும்பத் தொடங்கினாள்..ஆனாலும் அவளால் முழு மனதுடன் ஏற்கமுடியவில்லை..அவளது உறவுகள் மூலம் அந்த இளைஞனின் சில விரும்பத்தகாத பழக்க வழக்கங்கள் தெரியவர கடவுள் புண்ணியத்தில் குடும்பம் மூலமாக அவனது அதீத அட்டகாசத்திற்குப் பின் அந்தக் கதை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அவளுள் மிகுந்த சந்தோஷம்..லோச்சி மீதான காதல் அதிகரித்தது.ஆனால் அவன் மனதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. குடும்பத்தார் விட்டபாடில்லை மீண்டும் மாப்பிள்ளைப் படலம்..அவளின் பல எதிர்ப்புகளுக்குப் பிறகு ஒரு மாப்பிள்ளை விரும்பப்பட்டார். நல்ல குணமும்,கவரக்கூடிய அழகும் வசதியும் கொண்ட மாப்பிள்ளை கணவரானார்..கணவனின் அதீத அன்புக்கும் அக்கரைக்கும் மத்தியில் லோச்சியின் எண்ணங்கள் மறைய ஆரம்பித்தாலும் முழுமையாக இல்லை.அப்பப்ப அவள் ஞாபகத்தில் வந்து போனான்.சில நாட்களின் பின் அவளது மானசீகக் காதலன் திருமணம் முடித்ததறிந்து கவலை கலந்த சந்தோஷம் அடைந்தாள். நாட்கள் உருண்டோடின. ஸபியைப் போலவே லோச்சியும் ஒரு குழந்தைக்கு தகப்பனானான். அவளதும்,அவனதும் வாழ்க்கை அன்பான துணைவர்களுடன் மிகவும் சந்தோஷமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.. ஆனாலும் இன்றும் ஸபியால் லோச்சியை மறக்க முடியவில்லை.அது அவனுக்கும் நன்கு தெரியும்.ஆனால் இன்றும் அவளால் அவன் மனதைப் புரியமுடியவில்லை. லோச்சியின் நினைவுகளை அப்பப்ப என்னுடன் பகிர்வாள் ஸபி..நானும் சொன்னேன் என்னடி இது முட்டாள்தனம் அவனை மறந்துவிடுடி என்று.அவள் சொல்கிறாள்.இல்லடி அவன் நினைவுகள் ஆழ்மனதில் பதிந்துவிட்டது இதனால் எனது குடும்ப வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் தந்துவிடாது. சில வேளை நான் இறக்கும் வரைகூட என்னுள்ளே இருந்து இறக்கும்..என்று. சரி அவளது ஆசையை குழப்பக்கூடாது என்பதற்காக நானும் அவளது மானசீகக் காதல் கதையை அப்பப்ப கேட்டு ரசிப்பேன். ஸபியின் காதல் இன்றுவரை லோச்சிக்குத் தெரியும்.ஆனால் லோச்சி அவளைக் காதலிக்கிறானா என்றுதான் அவளுக்கும் தெரியாது. ம்ம்..என்ன செய்ய ஒரு அர்த்தமில்லாத காதல் கதையை தந்துவிட்டேனோ என்றுதான் யோசிக்கிறேன்.நண்பியின் ஆசையாக இருந்தது அதனால்தான்.

திங்கள், 13 டிசம்பர், 2010

ஒற்றைத்தலை வலி...

இந்த ஒற்றைத்தலை வலி கொஞ்ச நாளாவே என்னை பாடாய்ப்படுத்துது... மனதில் ஏதும் கவலை,யோசனை கூடிவிட்டால் போதும் வந்து விடும்...இந்த 2,3 நாட்களாக ரொம்பவும் கஷ்டப்பட்டேன்...இதற்கு முன்னரும் கடந்த வருட இறுதிப்பகுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். எனது இந்த பதிவை வாசிக்கும் நன்பர்கள் யாராவது இந்த ஒற்றைத்தலைவலி பற்றித்தெரிந்தருந்தால் கொஞ்சம் விளக்கம் தாருங்கள்..இது ஏன் வருகிறது,பின் விளைவுகள் என்ன என்பது பற்றி. மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிரேன்.

வியாழன், 9 டிசம்பர், 2010

என்னை நினைத்தே நானும் அழுதேன்...

எல்லாமே அததுட இஷ்டத்துக்கு நடந்துட்டே போகுது.. யாரப் பார்த்தாலும் "நான்தான் பெரிசு"ங்குற பெரிய தனம்.கொஞ்சம் கண் மூடினா போதும் தலையில கல்லை தூக்கிப் போட்டுட்டு அவங்கட பாட்டுல போய்ட்டே இருப்பாங்க. சாவு கூட "வந்தா வா போனாப்போ"ங்குற வேண்டா வெறுப்புக் கொள்கை..."வாரது வரட்டும் ரெண்டுல ஒன்று பார்த்துட்டுத்தான் மற்ற வேலை"ங்குற தைரியம்,தன்னம்பிக்கை எல்லாம் நிறைந்த மனிதர்களே இன்றைய பூமியில் நிரைந்து வாழ்கிறார்கள்..நல்ல விடயத்துக்காக மக்கள் இவ்வாறான கொள்கையில் வாழ்வது சந்தோசம். ஆனால் எங்க,எல்லாமே சுய நலம் தானே? நான் எப்பவுமே வாழ்க்கையை இலகுவாய் எடுத்துக் கொள்பவள் இருந்தும் இன்று எனது உறவினரால் ரனப்பட்ட இதயம் இயங்க மறுக்கிறது..தனது மகுடிக்கு என்னை இயக்க நினைக்கும் அந்த உறவை இந்தக்கணம் வெறுக்கிறேன்.(இந்த வெறுப்பு நாளை தவறாக மாறலாம்) என்ன செய்வது எல்லாவற்றையும் இயக்கபவன் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான்..தலைவிதி எனும் சொல்தானே பலரின் சோகத்துக்கு மருந்தாகுது..எனக்கும் தான்.மனம் பலத்த வேதனையில் உள்ளதால் சந்தோசமான அடுத்த பதிவுடன் மீண்டும் சந்திக்கிறேன்

புதன், 1 டிசம்பர், 2010

(ம)கன மழை...

நினைவாகிப்போன நேற்றில் நினைத்துப்பார்ப்பதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும்? நிரந்தரமில்லா இன்றில் நம்பிக்கையில்லாமல் என்னதான் செய்ய முடியும்? நிச்சயமில்லா நாளைக்காக என்னதான் செய்ய முடியும்? நினைவாகிய நேற்றும் நிரந்தரமில்லா இன்றும் நிச்சயமில்லா நாளையும் மனித வாழ்க்கைக்கான சிறந்ததோர் பாடமே... இப்போதெல்லாம் அடிக்கடி எங்களை நாங்களே ஆருதல் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கு.மழையின் சீற்றமும், விலையின் ஏற்றமும்,இறும்பாகிப் போன மனித இருதயங்களின் மாற்றமும் நிகழ் கால ஆதிக்கங்களே.. வாழ்க்கை என்னவென்று தெரிந்திராத காலத்தில் மிட்டாய்க்காக ஏங்கியது மனது..இதுதான் வாழ்க்கையென்று புரியும் நேரத்தில் எதற்காக ஏங்குகிறதென்றே புரியாத மனது.. ம்ம் எல்லாம் சேர்ந்ததுதானே உலகம்..வாழ்க்கை எதுவரையென்று வாழ்ந்துதான் பார்ப்போமே...எதையும் தாங்கும் இதயம் தந்த இறைவனுக்கு நன்றி..(சில சமயங்களில் மாத்திரம் நன்றிக்கு வாபஸ்). என்னங்க ரொம்ப போரடிக்குதா? அடிக்குற மழையில மனசும் சேர்ந்து அடிபட்டுப் போகுது..

செவ்வாய், 23 நவம்பர், 2010

அப்பப்பப்பா...

இது என்னங்க! உங்க ஊட்டு மழையா எங்க ஊட்டு மழையா? எனது கவலையெல்லாம் எங்க kandy கறைந்திடுமோ என்றுதான்... வெளிய போய் ஒரு வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து சேர முடியுதா? அப்பப்பப்பா நனைந்து நாயாகித்தான் வீடடுக்குள்ள போக முடியுது. குடையே எங்கள பார்த்து கேட்குது "முழுசா நனைந்த பின் முக்காடு எதுக்கு?" என்று. உடுப்புகளை கழுவி காய வைக்க முடியுதா? குட்டிப் பிள்ளைகள் படும் பாடு.. தடிமனும் காய்ச்சலும்.. மூக்கடைப்பால் ரொம்பவும் அவதிப்படுறாங்க... இன்னும் சொல்ல நிறைய இருக்கு..மீண்டும் சந்திப்போம்...

சனி, 20 நவம்பர், 2010

என்னதான் இருந்தாலும்.,

என்னதான் இருந்தாலும்..மனது நிம்மதி இல்லாதது போல் தடுமாற்றமாக இருக்குதா? அந்தமாதிரி நேரத்தில் கொஞ்சம் tv பாருங்கள்,இல்லை கொஞ்சம் வெளியே சென்று வாருங்கள்,இல்லை கொஞ்சம் radio கேளுங்கள்,இல்லை பேனாவை எடுத்து எதையாவது எழுதுங்கள்,பிடித்த பாடல்கள் 2ஜப் பாடுங்கள்,குழந்தைகளுடன் பேசுங்கள்,கொஞ்சம் body wash செய்து கொள்ளுங்கள்...இன்னும் பல... தொடரும்