புதன், 1 டிசம்பர், 2010

(ம)கன மழை...

நினைவாகிப்போன நேற்றில் நினைத்துப்பார்ப்பதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும்? நிரந்தரமில்லா இன்றில் நம்பிக்கையில்லாமல் என்னதான் செய்ய முடியும்? நிச்சயமில்லா நாளைக்காக என்னதான் செய்ய முடியும்? நினைவாகிய நேற்றும் நிரந்தரமில்லா இன்றும் நிச்சயமில்லா நாளையும் மனித வாழ்க்கைக்கான சிறந்ததோர் பாடமே... இப்போதெல்லாம் அடிக்கடி எங்களை நாங்களே ஆருதல் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கு.மழையின் சீற்றமும், விலையின் ஏற்றமும்,இறும்பாகிப் போன மனித இருதயங்களின் மாற்றமும் நிகழ் கால ஆதிக்கங்களே.. வாழ்க்கை என்னவென்று தெரிந்திராத காலத்தில் மிட்டாய்க்காக ஏங்கியது மனது..இதுதான் வாழ்க்கையென்று புரியும் நேரத்தில் எதற்காக ஏங்குகிறதென்றே புரியாத மனது.. ம்ம் எல்லாம் சேர்ந்ததுதானே உலகம்..வாழ்க்கை எதுவரையென்று வாழ்ந்துதான் பார்ப்போமே...எதையும் தாங்கும் இதயம் தந்த இறைவனுக்கு நன்றி..(சில சமயங்களில் மாத்திரம் நன்றிக்கு வாபஸ்). என்னங்க ரொம்ப போரடிக்குதா? அடிக்குற மழையில மனசும் சேர்ந்து அடிபட்டுப் போகுது..

5 கருத்துகள்:

  1. வாழ்க்கையை புரிந்திருக்கின்றீர்கள் சப்னா..,நினைவாகிப் போன நேற்றில் நம்பிக்கையை தேடுகிறீர்கள்..நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதனை நன்கு தெரிந்துள்ளிர்கள்.அதுவே பெண்மையின் வெற்றிக்கு போதும்.நல்லா எழுதுறிங்க...தொடர்ந்து எழுதுங்க......................

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வெற்றிப் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...

    மதி.சுதா.

    நனைவோமா ?

    பதிலளிநீக்கு
  3. ம.தி.சுதா, உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  4. அழகான, கவித்துவமான வார்த்தை பரிமாற்றம். வாழ்த்துக்கள் Shafna . தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு