வியாழன், 30 டிசம்பர், 2010

நண்பியின் காதல் கதை...

2010உம் கூட பெரிதாக எனக்கொரு மாற்றத்தையும் தந்துவிடவில்லை...வெரும் எழுத்தினாலான வருடத்தால் என்னதான் செய்ய முடியும்? நாமாக எதையாவது செய்தால் தானே நமக்கு நன்மை கிடைக்கும். இதில் காலத்தை மெச்சுவதும் குறை கூறுவதும் முட்டாள் தனமே...எதற்கும் ஒரு எல்லை வேண்டும் என்பதற்காகவோ என்னவோ இந்த செக்கன்,நிமிடம்,மணித்தியாலம்,நாள்,வாரம்,மாதம்,வருடக் கணக்குகளெல்லாம்... செய்துதான் பார்ப்போமே என்று நினைப்பவன் எப்படியாவது வெற்றி அடைகிறான்.இப்படித் துணிந்த மனிதனுக்கு காலம் ஒரு பொருட்டே அல்ல. சுகதேகியாக இருக்கும்போதே உழைப்பைப் பற்றி சிந்திக்க வேண்டும்,இளமையோடு இருக்கும் போதே கடமைகளை சிந்திக்க வேண்டும்,செல்வம் இருக்கும்போதே தர்மத்தை சிந்திக்க வேண்டும்...ஆக செய்ய வேண்டிய காரியங்களை செய்யவேண்டிய பருவங்களில் செப்பனே செய்து வந்தால் வெற்றி நிச்சயம்.இதில் செயற்திறனும்,புத்தி சாதுர்யமும் இருப்பின் எக்காலத்திலும் வெற்றி நிச்சயம். காதலும் கற்று மற என்றுதானே சொல்லப்படுகிறது...இது எத்தனை வீதம் உண்மையாகிறதோ? எனக்கு மிகவும் நெருக்கமான தோழியின் காதல் கதையை அவளது அனுமதியுடன் பெயர் மாற்றித் தருகிறேன். ஸபி...இவள் இயற்கையை அதிகம் ரசித்து யதார்த்தங்களை விரும்பக்கூடிய ஒரு பெண்..இவளது அழகும் கூட பலருக்கு இவளை எதிரியாக்கியது..இவளது பள்ளிக் காலத்தில் இவளுக்கு வந்த காதல் கடிதங்கள் இனம்,மதம்,மொழிப் பாகுபாடு அற்றது..இன்றும் அவள் நினைத்து சிரித்துக்கொள்ளும் விடயங்களில்,அவளைத் தேடி வந்த சில காதல் கடிதங்கள் கொடுத்தவரின் வீட்டுக்கே அவள் மூலம் சென்றதுதான்.. இப்படியிருக்க இவளைத் தேடிவந்த காதலில் ஒன்று மனதையீர்ர்க்க காதல் மலர்ந்தது.படிப்பில் கெட்டிக்காரியாக இருந்த இவளுடன் அனைத்து ஆசிரியர்களும் அன்பாக இருந்தார்கள்.வகுப்பாசிரியை மிகவும் அன்பாக இருந்தார். இதில் கொடுமை என்னவென்றால் இவள் காதலிக்கும் இளைஞன் அவளது வகுப்பாசிரியையின் தம்பி என்பது அவளுக்குத் தெரியாது. பின் விடயம் இரு தரப்பிலும் தெரிய வர அவள் வீட்டு வீரத் தளபதிகளான அண்ணன்மார் மாமன்மார் சேர்ந்து சென்று அவனை மிரட்டியதும்,இங்கு ஆசிரியை அவளுக்கு புத்திமதி கூறி கடிதம் கொடுத்ததும் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது..படிப்பு முடியும் வரை அவளைச் சுற்றிய ஒருதலைக்காதல்கள் தொடர்ந்தன. அவளுள்ளும் ஒரு சில காதல்கள் மின்னி மறைந்தன...அவளது உயர்தர இருதிப்பகுதியில் ஒரு புத்திசாலி(இவளின் தூரத்து உறவு) இவளிடம் காதலைச் சொல்லி இவள் மறுக்க பெரியவர்கள் மூலம் குடும்பத்தின் விருப்பத்தைப் பெற்றுக் கொண்டான்.பணம் படைத்தவன் அழகானவனும் கூட..இருந்தும் ஏனோ அவளைக் கவரவில்லை. வீட்டாரும் அவனும் எவ்வளவோ முயற்சித்தும் அவளது மனதை மாற்ற முடியவில்லை... இவளின் 10ம் தர ஆரம்பப் பகுதியில் இவளையும் அறியாமல் உள்ளே நுழைந்த ஒரு காதல்(ஆரம்பத்தில் இவளால் வெறுக்கப்பட்டு,பின் பல காரணங்களுக்காக விரும்பப்பட்ட ஒரு காதல்) இதன் ஆதிக்கம் உள்ளே அதிகரித்திருந்ததால் அவளால் ஏனையவற்றை ஏற்பது கஷ்டமாகத்தான் இருந்தது.. முகமறியப்படாத அந்தக் காதலன் "லோச்சி" அவள் மனதை ஆண்டான்...சாத்தியப்படாதது எனத் தெரிந்திருந்தும் அவன் மீதான காதல் தொடர்ந்தது..இதை அவனும் அறிந்திருந்தான்.ஆனாலும் அவனது மனதை அவளால் புரிய முடியவில்லை.லோச்சி பலராலும் விரும்பப் படக்கூடிய ஒரு பரபரப்பான துறையில் தொழில் புரிந்துகொண்டிருந்தான். இங்கே இவளது குடும்பத்தின் விருப்பைப் பெற்ற இளைஞன் அதி கூடிய முயற்சிக்குப் பின் அவளது புன்னகையை பதிலாகப் பெற்றான்.. அவளது படிப்பும் முடிந்தது. லோச்சி மீதான காதல் அவளுள் தொடர்ந்தது..அவள் மீதான காதல் அந்த அழகிய இளைஞனுள் அதிகரித்தது. இவளும் ஒருவாறு லோச்சியை அடி மனதினுள் புதைத்து வைத்துவிட்டு குடும்பத்தின் விருப்புக்கேற்ப அந்த இளைஞனை விரும்பத் தொடங்கினாள்..ஆனாலும் அவளால் முழு மனதுடன் ஏற்கமுடியவில்லை..அவளது உறவுகள் மூலம் அந்த இளைஞனின் சில விரும்பத்தகாத பழக்க வழக்கங்கள் தெரியவர கடவுள் புண்ணியத்தில் குடும்பம் மூலமாக அவனது அதீத அட்டகாசத்திற்குப் பின் அந்தக் கதை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அவளுள் மிகுந்த சந்தோஷம்..லோச்சி மீதான காதல் அதிகரித்தது.ஆனால் அவன் மனதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. குடும்பத்தார் விட்டபாடில்லை மீண்டும் மாப்பிள்ளைப் படலம்..அவளின் பல எதிர்ப்புகளுக்குப் பிறகு ஒரு மாப்பிள்ளை விரும்பப்பட்டார். நல்ல குணமும்,கவரக்கூடிய அழகும் வசதியும் கொண்ட மாப்பிள்ளை கணவரானார்..கணவனின் அதீத அன்புக்கும் அக்கரைக்கும் மத்தியில் லோச்சியின் எண்ணங்கள் மறைய ஆரம்பித்தாலும் முழுமையாக இல்லை.அப்பப்ப அவள் ஞாபகத்தில் வந்து போனான்.சில நாட்களின் பின் அவளது மானசீகக் காதலன் திருமணம் முடித்ததறிந்து கவலை கலந்த சந்தோஷம் அடைந்தாள். நாட்கள் உருண்டோடின. ஸபியைப் போலவே லோச்சியும் ஒரு குழந்தைக்கு தகப்பனானான். அவளதும்,அவனதும் வாழ்க்கை அன்பான துணைவர்களுடன் மிகவும் சந்தோஷமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.. ஆனாலும் இன்றும் ஸபியால் லோச்சியை மறக்க முடியவில்லை.அது அவனுக்கும் நன்கு தெரியும்.ஆனால் இன்றும் அவளால் அவன் மனதைப் புரியமுடியவில்லை. லோச்சியின் நினைவுகளை அப்பப்ப என்னுடன் பகிர்வாள் ஸபி..நானும் சொன்னேன் என்னடி இது முட்டாள்தனம் அவனை மறந்துவிடுடி என்று.அவள் சொல்கிறாள்.இல்லடி அவன் நினைவுகள் ஆழ்மனதில் பதிந்துவிட்டது இதனால் எனது குடும்ப வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் தந்துவிடாது. சில வேளை நான் இறக்கும் வரைகூட என்னுள்ளே இருந்து இறக்கும்..என்று. சரி அவளது ஆசையை குழப்பக்கூடாது என்பதற்காக நானும் அவளது மானசீகக் காதல் கதையை அப்பப்ப கேட்டு ரசிப்பேன். ஸபியின் காதல் இன்றுவரை லோச்சிக்குத் தெரியும்.ஆனால் லோச்சி அவளைக் காதலிக்கிறானா என்றுதான் அவளுக்கும் தெரியாது. ம்ம்..என்ன செய்ய ஒரு அர்த்தமில்லாத காதல் கதையை தந்துவிட்டேனோ என்றுதான் யோசிக்கிறேன்.நண்பியின் ஆசையாக இருந்தது அதனால்தான்.

4 கருத்துகள்:

  1. உங்கள் நண்பியின் வாழ்க்கைச் சம்பவத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.இருந்தாலும் உங்கள் நண்பியை சந்திக்கும் போதெல்லாம் நல்ல விடயங்களைப்பற்றி பேசுங்கள்,வாழ்க்கையைப் பற்றி பேசுங்கள் தன்னம்பிக்கையைப்பற்றி பேசுங்கள்.......நன்றாகயிருக்கிறது இது போன்ற பல விடயங்களை எழுதுங்கள்......

    பதிலளிநீக்கு
  2. ////அர்த்தமில்லாத காதல் கதையை தந்துவிட்டேனோ என்றுதான் யோசிக்கிறேன்.நண்பியின் ஆசையாக இருந்தது அதனால்தான்////

    யார் சொன்னது நல்லாயிருக்குதுங்க....

    பதிலளிநீக்கு
  3. நன்றாக இருக்கின்றது நண்பரே! கொஞ்சம் பநித்யமைப்பதில் சிரத்தை எடுத்தீர்கள் என்றால், இன்னும் வாசிப்பதற்கு இலகுவாக இருக்கும் என்பது எனது கருத்து.........

    தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு